தமிழகம்

குரூப்-2 தேர்வில் மனிதநேய மையத்தின் மாணவர்கள் சாதனை

செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகத்தின் மாநில தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வுக்கும், தொடர்ந்து நடந்த முதன்மை எழுத்துத் தேர்வுக்கும் மனிதநேய மையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நேர்முகத் தேர்வுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 373 பேர் பயிற்சி பெற்றனர்.

இந்நிலையில், குரூப்-2 தேர்வுக்கான இறுதி மதிப்பெண் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், எங்கள் மையத்தில் படித்த மாணவி சி.ஜெயப்ரீதா முதலிடத்தையும் (251.50 மதிப்பெண்), ஆர்.வெங்கட்ராமன் 2-ம் இடத்தையும் (247.50), சி.சிவன்காளை 3-ம் இடத்தையும் (246.50) பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT