தமிழகம்

தூத்துக்குடியில் காலை 11 மணி நிலவரப்படி 25.01% வாக்குப்பதிவு: வாக்குச்சாவடிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் காலை 11 மணி நிலவரப்படி 25.01% வாக்குப்பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குரிமையை செலுத்தி வருகின்றனர்.

மாவட்டத்தில் முதல் கட்டமாக 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1126 பதவிகருக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த பதவிகளை கைப்பற்ற 3561 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

824 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரை எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 4,00,535 வாக்காள்ர்கள் இந்தத் தேர்தலில் வnக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் பார்வையாளர் வி.சம்பத், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் வாக்குப்பதிவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT