தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் பரிசுப் பொருட்கள் வழங்குவதற்காக தி.மலை பாத்திரக் கடைகளில் திரண்ட கூட்டம்: மொத்தமாக பொருட்களை வாங்கி செல்கின்றனர்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை கண்காணிப் பையும் மீறி உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கு வதற்காக எவர்சில்வர், பித்தளை பாத்திரங்களை பாத்திரக் கடைகளில் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் ஊரக உள்ளாட்சி பதவி களுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 18 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 7,442 பதவிகளுக்கான தேர்தலில் 16 ஆயிரத்து 593 பேர் போட்டியிடுகின்றனர். இரண்டு கட்டங் களாக தேர்தல் நடைபெறுவதால் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் களை கட்டியுள்ளது.

பொதுவாக உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவருவதற்காக பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கமாக இருக்கும்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் அமைக்கப் பட்டுள்ளனர். இவர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் இருந்தாலும் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் தாராளமாக வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

திருவண்ணாமலை நகரில் உள்ள பிரபலமான சில பாத்திரக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களாக கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது. மார்கழி மாதத்தில் திருமண நாட்கள் ஏதும் இல்லாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தலா ரூ.200 முதல் ரூ.1,500 மதிப்பிலான பாத்திரங்களை மொத்தமாக வாங்கிச் செல்வதால் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பாத்திரக் கடைகளில் எவர் சில்வர் அன்னக்கூடை, அலுமினிய அன்னக்கூடை, எவர்சில்வர் பாத் திரம், பித்தளை குடங்கள், பித்தளை கமாட்சியம்மன் விளக்குகள், டிபன் கேரியர்கள், சில்வர் தாம்புல தட்டுகள், பாத்திரங்கள், பித்தளை மணிகள் என 100 எண்ணிக்கை முதல் 500 எண்ணிக்கை வரை வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து பாத்திரங்கள் வாங்கிச் செல்பவர்கள் கூறும் போது, ‘‘கிராம ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் களின் மொத்த வாக்குகள் 200 முதல் 300 வரை இருக்கும். குறைந்தபட்சம் 100 வாக்காளர் களுக்காவது பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக, வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி யிடுபவர்கள் ரூ.200 முதல் ரூ.500 வரையிலான பரிசுப் பொருட்கள் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சிலர் புடவைகளை வழங்குகின்றனர். புடவைகள் கொடுக்கும் போது சில பெண்களுக்கு கலர், டிசைன் உள்ளிட்டவை பிடிக்காமல் போய்விடும் என்பதால் வீட்டுக்கு உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் பாத்திரங்களாக கொடுக்கப்படுகிறது. ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டி யிடுபவர்கள் ஒரு வாக்குக்கு ரூ.2,000 வரையும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. 5 ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும் என்பதால் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள்’’ என்றனர்.

SCROLL FOR NEXT