சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் சிறுவர், சிறுமிகளுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.
மிகவும் பழமை வாய்ந்த சிறார் மன்றங்களில் கண்ணகி நகர் சிறார் மன்றமும் ஒன்று. 2002-ல் தொடங்கப்பட்ட இந்த சிறார் மன்றத்தில் படித்து ஏராளமான சாதனையாளர்கள் உருவாகி இருக்கின்றனர்.
இங்கு தற்போது 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களின் திறமைக்ளை வளர்த்து வருகின்றனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், இன்று (25.12.2019) கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் (Boys Club) சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். குழந்தைகளுடன் கேக் வெட்டி, அவர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் மற்றும் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) சீமா அகர்வால், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறுவர் சிறுமிகளுக்கு கேக் வழங்கி அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அடையாறு துணை ஆணையாளர் பி.பகலவன், துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் லோகநாதன், சிறார் மன்ற நிர்வாகிகள் மற்றும் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.