தமிழகம்

வளிமண்டல சுழற்சி; கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:

“வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், சீர்காழி, கொள்ளிடம், கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT