தமிழகம்

ஆலந்தூர் விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் பணியால் விபத்துகள் அதிகரிப்பு: குறுகிய ஜிஎஸ்டி சாலை காரணமா?

செய்திப்பிரிவு

மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆலந்தூர் விமான நிலையம் இடையே ஜிஎஸ்டி சாலையில் விபத்துகள் ஏற்பட்டு கடந்த சில மாதங்களில் 4 பேர் இறந்துள்ளனர். இது வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வண்ணாரப் பேட்டை - விமான நிலையம், சென்ட் ரல் பரங்கிமலை என 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத் துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கின்றன. மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் போக்குவரத்து பரஸ்பரம் பாதிக்கப்படாத வகை யில் உரிய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்கள் அனைத்தும் பிரதான சாலைகளை ஒட்டியே அமைந்திருப்பதால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகி றது.

இதுதவிர, மெட்ரோ ரயில் பணிகளின்போது அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. பிஹார், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்த 2,500-க்கும் அதிக மான தொழிலாளர்கள் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொறியாளர்களின் வழிகாட்டுதலு டன் இவர்கள் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். சில மாதங் களுக்கு முன்பு, சைதாப்பேட்டை யில் ராட்சத கிரேன் சரிந்து ஒரு தொழிலாளி இறந்தார். கிண்டி அருகே ராட்சத தூண்களை இணைப்பதற்காக அடுக்கிவைத் திருந்த இரும்புக் கம்பிகள் சரிந்து ஒரு தொழிலாளி இறந்தார்.

கடந்த ஜூன் 16-ம் தேதி பரங்கி மலை ராணுவ பயிற்சி அகாடமி நுழைவுவாயில் அருகே சாலை யில் பைக்கில் சென்ற பொறியாளர் கிரிதரன் (30), இரும்பு தூண் விழுந்ததில் இறந்தார். கடந்த மாதம் 25-ம் தேதி மின்சாரம் பாய்ந்து ஒரு ஊழியர் காயம் அடைந்தார். ஜிஎஸ்டி சாலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்ற ரவி என்ப வர், கம்பி விழுந்ததில் காயம் அடைந்தார். விபத்துகள் தொடர் வதால், மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடத்தையொட்டி சாலை களில் செல்லவே வாகன ஓட்டிகள் பயப்படுகின்றனர்.

இதுபற்றி போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ‘‘மெட்ரோ ரயில் பணி நடப்பதால், மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந் தூர் வரை ஜிஎஸ்டி சாலை மிகவும் குறுகிவிட்டது. அந்த இடத்தை வாகனங்கள் கடந்து செல்ல வெகு நேரம் ஆகிறது. அதிக வாகனங் கள் செல்லும் பகுதி என்பதால், வழக்கமாகவே இங்கு சிறிய அளவிலான விபத்துகள் நடக்கும். மெட்ரோ ரயில் பணிகளின் காரண மாக விபத்துகள் அதிகரிக்கின்றன. கடந்த சில மாதங்களில் மெட்ரோ ரயில் பணியால் மட்டும் 4 பேர் இறந்துள்ளனர்’’ என்றனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் பணிகளை முழு பாதுகாப்புடன் மேற்கொள்ள தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை களை எடுத்துவருகிறோம். இதுதொடர்பாக மாதந்தோறும் கூட்டம் நடத்துகிறோம்.

ஆலந்தூர் விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். விபத்துகள் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT