தமிழகம்

காவிரியில் மூழ்கிய 4 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணத்தில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 மாண வர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன.

கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை கணபதி நகரைச் சேர்ந்த வர் புகழேந்தி. இவரது மகன் சஞ்சய் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் காலை டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது சகாஜி நாயக் கன் தெருவில் உள்ள காவிரி ஆற்றுப் படித்துறையில் குளித்த போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதேபோன்று கும்ப கோணத்தை அடுத்த கொரநாட்டுக் கருப்பூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த இஸ்மத் பாட்சாவின் மகன் யாசர், சையது முகம்மதுவின் மகன் முகம்மது ஹனிபா ஆகியோர் 9-ம் வகுப்பு மாணவர்கள். முகம்மது சித்திக்கின் மகன் சல்மான் 10-ம் வகுப்பு மாணவர். இவர்கள் மூவரும் மணஞ்சேரி அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது ஆற்றுத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தேடும் பணி நிறுத்தம்

தகவல் அறிந்ததும் தீயணைப் புத் துறையினர் மற்றும் உறவி னர் காவிரி ஆற்றில் பல இடங் களில் தேடினர். தண்ணீர் அதிக மாக இருந்ததாலும், இரவாகி விட்டதாலும் தேடும் பணி நிறுத் தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காவிரி ஆற்றுத் தண்ணீர் அரசலாற்றிலும், மண்ணியாற்றிலும் திருப்பி விடப்பட்டு, நேற்று காலை முதல் மீண்டும் தேடும் பணி நடைபெற்றது. இதில் மணஞ்சேரி தடுப்பணை மதகு அருகே ஹனிபா, யாசர், சல்மான் ஆகியோரின் உடல்களும், அரசு மருத்துவ மனைக்குப் பின்புறம் சஞ்சய் உடலும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற் றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரே நாளில் 4 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT