தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்: ஜி.கே.மணி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு பாமக தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை, அன்றாட பிரச்சினைகளை நிறைவு செய்வது உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள்தான். உள்ளாட்சி நிர்வாகம் நல்லாட்சி கொடுக்க வேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜி.கே.மணி தெரி வித்துள்ளார்.

SCROLL FOR NEXT