தமிழகம்

தமிழ்நாடு நீதிமன்றம் என பெயர் மாற்றக் கோரிய மத்திய சட்ட அமைச்சகம்: உயர் நீதிமன்றம் நிராகரிப்பு 

செய்திப்பிரிவு

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்ற மத்திய சட்ட அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சகம், உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போன்ற சார்ட்டர்டு நீதிமன்றங்களான பம்பாய் உயர் நீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படவில்லை எனவும், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உள்ளதால் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வது முறையாக இருக்காது என்றும் நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT