ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக மூன்று நீதிபதிகளைப் பணி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேரைப் பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மாவட்ட முன்னாள் கூடுதல் நீதிபதிக்கு எதிரான ஊழல் வழக்கைத் தொடர்ந்து நடத்தவும் நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.
இது தவிர, திறமையின்மை காரணமாக எட்டு கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பணி நீட்டிப்பும் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று நீதிபதிகளுக்கு ஐந்து முறை ஊதிய உயர்வு ரத்து செய்தும், அவர்களைத் தீவிரக் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 வயதாக அதிகரிக்கும் கோரிக்கையையும் ஏற்க மறுத்துள்ளனர்.