பொதுமக்கள் சுருக்கத் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் இன்று வெளியிட்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், இன்று (23.12.2019) ரிப்பன் மாளிகை, கூட்டரங்கில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்த ஆண்டு 26.03.2019 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 05 ஆயிரத்து 216 ஆகும். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 59 ஆயிரத்து 862 ஆகும். இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 988 ஆகும். சென்னை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 66 ஆயிரத்து 66 ஆகும்.
நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 336 ஆண் வாக்காளர்கள், 16 ஆயிரத்து 015 பெண் வாக்காளர்கள் மற்றும் 11 இதர வாக்காளர்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 362 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 5,824 ஆண் வாக்காளர்கள், 3,911 பெண் வாக்காளர்கள் மற்றும் 10 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9,745 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை சட்டப்பேரவை தொகுதி வாரியாக கீழ்கண்டவாறு உள்ளது.
மொத்த வாக்காளர் எண்ணிக்கை 38,88,673. குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர்.
அதிகபட்சமாக வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர்.