என்எல்சி தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (வியாழக்கிழமை) சந்தித்து மனு அளித்தனர்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் 48 பேர் பிரதமரை சந்தித்தனர்.
ஊதியமாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி என்எல்சி யில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் ஜூலை 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத் தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துவிட்டன. இதற்கிடையே தொழிலாளர்களும் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், என்எல்சி தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.