குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருவதையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். நுண்ணறிவு பிரிவு (உளவு) போலீஸார் போராட்டங்களை உன்னிப்பாக கண்காணித்து கள நிலவரத்தை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெரினா, சேப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, வள்ளுவர் கோட்டம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.