தமிழகம்

ராமநாதபுரத்தில் உள்ளாட்சி தேர்தலில் 6048 பேர் போட்டி: 1545 பேர் போட்டியின்றி தேர்வு

கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 6048 பேர் போட்டியிடுகின்றனர். 50 ஊராட்சிகளின் தலைவர்கள், 1494 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் என 1545 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு வாபஸ் முடிந்து இறுதி வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 3075 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்த 5977 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் 608 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர், 1494 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 3875 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஊராட்சி தலைவர்: மொத்தம் உள்ள 429 ஊராட்சி தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்த 2283 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 992 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். 50 ஊராட்சிகளின் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 1241 பேர் போட்டியிடுகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்: மொத்தம் உள்ள 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1381 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் 543 பேர் மனு வாபஸ் பெற்றனர். மண்டபம் ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அழகன்குளத்தைச் சேர்ந்த கபியாராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இறுதியாக 837 பேர் போட்டியிடுகின்றனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்: மொத்தம் உள்ள 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 144 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில் 49 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக 95 பேர் போட்டியிடுகின்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3691 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 6048 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 50 ஊராட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 1545 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT