தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30-ம் தேதி உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், அம்மாவட்டத்தில் 589 ஊராட்சி மன்றத் தலைவர் பதவி இடங்களுக்கு 4,569 நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்து களத்தில் போட்டியிடுகின்றனர். இதில் 20 ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் குருங்கலூர், குருவாடிப்பட்டி, கல்வி ராயப்பேட்டை, நாகத்தி, துறையூர், வாழ மரக்கோட்டை ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் திருவையாறு ஒன்றியத்தில் ஐம்பது மேல் நகரம், பூதராய நல்லூர், கோனேரிராஜபுரம் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஒரத்தநாடு ஒன்றியத்தில் தலையாமங்கலம், வடக்கூர்தெற்கு, கீழ வன்னிபட்டு, குலமங்கலம் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்களும், கும்பகோணம் ஒன்றியத்தில் கள்ளப்புலியூர், பாபநாசம் ஒன்றியத்தில் இலுப்ப கோரை, அம்மாபேட்டை ஒன்றியத்தில் இரும்புத்தலை, பெருமாக்கநல்லூர் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்களும் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.
பேராவூரணி ஒன்றியத்தில் அலிவலம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் சொக்கநாதபுரம், அடக்க தேவன் ஆகிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர் பதவிக்கு ஊராட்சி மன்றங்களில் இருந்து ஒருவர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்தனர். எனவே அந்த ஒவ்வொருவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.