தமிழகம்

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 69 பேர் போட்டியின்றி தேர்வு

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட் சித் தலைவர் பதவிக்கு 19 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

மாவட்டத்தில் 445 ஊராட்சி களில் தலைவர் பதவிக்கு 2,376 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 839 பேர் வாபஸ் பெற்றனர். 19 பேர் போட்டியின்றி தேர்வாகினர். 426 ஊராட்சிகளில் 1,518 பேர் போட்டியிடுகின்றனர்.

சிவகங்கை ஒன்றியத்தில் அலவாக்கோட்டை ஊராட்சி- பிரகாசம், திருப்புவனம் ஒன்றி யத்தில் கணக்கன்குடி-கவிதா, மாரநாடு- முத்துபிள்ளை, வெள் ளூர்- செண்பகவள்ளி, தவக்கா ரேந்தல்- கணேசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகின் றனர்.

சிங்கம்புணரி ஒன்றியத்தில் சிவபுரிப்பட்டி-தமிழரசி, கால்பிரவு- ராஜேஸ்வரி, பச்சேரி- தமிழ்ச்செல்வி, சாக்கோட்டை ஒன்றியத்தில் செட்டிநாடு-சாந்தி, களத்தூர்-ஜோதி பாலமுருகன், நாட்டுச்சேரி-கருப்பையா வீரப்பன், மாலைக்கண்டான்-மெய்யர், நாச்சியாபுரம்-சொர்ணவள்ளி, கல்லிபட்டு- வைரமணி, இளையான்குடி ஒன்றியத்தில் எஸ்.காரைக்குடி- குழந்தை பாண் டியன், அரண் மனைக்கரை-சுதா, தேவகோட்டை ஒன்றியத்தில் பொன்னலிக்கோட்டை-முத்தையா, பனங்குளம்-பாண்டி, கண்ணங்குடி ஒன்றியத்தில் கண் ணங்குடி-சோனைமுத்து ஆகி யோர் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் திமுக 12 இடங்கள், காங்கிரஸ் 3, விசிக ஒரு இடத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தன. இந்நிலையில் கல்லல் ஒன்றிய 12-வது வார்டில் அதிமுக சார்பில் ஆவின் தலைவர் அசோகன் மனைவி பிரேமா வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.

அவரை எதிர்த்து திமுக சார்பில் எஸ்ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த செல்வராணி, அவருக்கு மாற்றாக லதா, அமமுக சார்பில் மஞ்சுளா ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதில் திமுக வேட்பாளர் உட்பட மூன்று பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் அதிமுக வேட்பாளர் பிரேமா போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான மனு வாபஸ் பெறுதல் நேற்று பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. இத்தேர்தலில் ராமநாதபுரம், போகலூர், ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் தலா ஒன்று, திருப்புல்லாணி ஒன்றியத்தில் 3, திருவாடானை ஒன்றியத்தில் 3, பரமக்குடி ஒன்றியத்தில் 4, முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 10, கடலாடி ஒன்றியத்தில் 9, கமுதி ஒன்றியத்தில் 17 என மொத்தம் 50 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டுள்ளதாக தேர்தல் அதி காரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT