மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 4 விருதுகள் உட்பட தமிழக ஊரக வளர்ச்சி துறைக்கு 13 தேசிய விருதுகளை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் இருந்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார். உடன் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா உள்ளிட்டோர். 
தமிழகம்

தமிழக ஊரக வளர்ச்சி துறைக்கு 13 தேசிய விருதுகள்: டெல்லியில் நடந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 4 விருதுகள் உட்பட தமிழக ஊரக வளர்ச்சி துறைக்கு 13 தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அமைச்சர் எஸ்.பி.வேலு மணியிடம் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய வகையில், பணிகளை விரைந்து முடித்தது, இயற்கை வளம் மற்றும் நீர்வள மேலாண்மை பணிகளை சிறப்பாக செயல்படுத்தியது ஆகியவற்றில் முதலிடம் பெற்ற வகையில் 2 மாநில அளவிலான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட அளவில், சிறந்தநீர்த்தேக்கி வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்கிய வகையில் வேலூர் மாவட்டத்துக்கு மாவட்டஅளவில் 2 விருதுகள் வழங்கப் பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்கியதற்காக திருச்சி மாவட் டத்துக்கு முதலிடத்துக்கான மாவட்ட அளவிலான தேசிய விருதும், பணிகளை முடித்ததில் சிறந்த செயல்பாட்டுக்காக கரூர் மாவட்டத்துக்கு 2-ம் இடத்துக்கான விருது என 4 விருதுகள் வழங் கப்பட்டன.

குறித்த காலத்தில் தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்கியதாக காஞ்சிபுரம் மாவட்டம்- புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு முதலிடத்துக்கான தேசிய விருதும், ஊராட்சி அளவில் வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிவகங்கை- தேவகோட்டை ஊராட்சிக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

அதேபோல், மறைமலை நகரில் செயல்பட்டு வரும் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்துக்கும், ரூர்பன் திட்டத்தின் கீழ் ஒட்டு மொத்த செயல்பாட்டுக்கான 2-ம் இடம், தொகுப்புகளுக்கான இடம் சார்ந்த திட்டமிடலில் 3-ம்இடத்துக்கான தேசிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சி வழங்கியதற்காக தமிழகத்துக்கு தேசிய தங்க விருது என 13 விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விருதுகளை, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் இருந்து தமிழக உள்ளாட்சித் துறை அமைச் சர் எஸ்.பி.வேலுமணி பெற்றார்.

SCROLL FOR NEXT