சீமான் - நித்யானந்தா: கோப்புப்படம் 
தமிழகம்

என்னை இந்திய குடிமகன் இல்லை என்று சொன்னால் கவலையில்லை; எங்களுக்கு நித்யானந்தா இருக்கிறார்: சீமான் நகைச்சுவை

செய்திப்பிரிவு

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் தன்னை இந்திய குடிமகன் அற்றவனாக்கி விட்டால், நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்குச் சென்று விடுவேன் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில், இன்று (டிச.18) சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய சீமான், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் தன்னை இந்தியக் குடிமகன் அற்றவனாக்கி விட்டால், ஒரு கவலையும் இல்லை எனவும், தங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும், அவரது கைலாசா நாடும் இருப்பதாகக் கூறினார்.

"என்னை குடியுரிமை அற்றவனாக்கி விட்டால், கவலையில்லை. அப்படிச் சொல்லிவிடுங்கள், நான் ஓடிவிடுகிறேன் என்று தான் நானும் சொல்கிறேன். எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. கைலாசா என்று ஒரு நாடு உருவாகி விட்டது. எங்கள் அதிபர் நித்யானந்தா இருக்கிறார். அவர் கைலாசா என்றூ ஒரு நாட்டை உருவாக்கி விட்டார். அங்கு நாங்கள் அழகாக இருப்போம்" என்று சீமான் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT