கோப்புப்படம் 
தமிழகம்

விநியோக சிக்கலால் வாகன ஓட்டிகள் அலைக்கழிப்பு: ஆர்டீஓ அலுவலகங்களில் ‘பாஸ்டேக்’ அட்டை வழங்கப்படுமா?

கி.ஜெயப்பிரகாஷ்

சுங்கச்சாவடிகளில் மின்னணு முறை யில் கட்டணம் செலுத்துவதற்கான ‘பாஸ்டேக்’ அட்டையை தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டீஓ அலு வலகங்களிலும் வழங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், உரிமை யாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் வாகன எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் நீண்டதூரம் அணி வகுத்து நிற்கின்றன. இதனால், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க நேரிடுகிறது. இது தவிர, வாகனங்கள் திருட்டு, வாக னங்கள் மூலம் பொருட்களை கடத்துதல் போன்ற சம்பவங்களும் நடக்கின்றன.

இந்நிலையில், சுங்கச்சாவடி களில் வாகன நெரிசலை குறைப்ப தோடு, பாதுகாப்பு அம்சங்களையும் மேம்படுத்தும் நோக்கில், மின் னணு முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் ‘பாஸ்டேக்’ (FASTag) முறையை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வந்துள் ளது. இதன்படி, ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் இரு மார்க்கங்களி லும் தலா 2 பாதைகளில் ரொக்க மாக கட்டணம் செலுத்தலாம். இந்த சலுகை ஜனவரி 14-ம் தேதி வரை மட்டுமே அளிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித் துள்ளது.

‘பாஸ்டேக்’ திட்டத்தின்படி, ஆர்எஃப்ஐடி (RFID - Radio Frequency Identification) சார்ந்த ‘பாஸ் டேக்’ கார்டு, வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் (விண்ட்ஷீல்டு) ஒட்டப்படும். சுங்கச்சாவடிகளில் இந்த ‘பாஸ்டேக்’ அட்டை வழங்கப் படுகிறது. வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆர்.சி.(வாகன பதிவுச் சான்று), புகைப்படம், அடையாள அட்டையை வழங்கி பெற்றுக் கொள்ளலாம். வாகனங் களுக்கு ஏற்ப கட்டணம் மாறும். உதாரணத்துக்கு, காருக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ரூ.250 திரும்ப பெறும் வைப்புத் தொகை, ‘பாஸ்டேக்’ அட்டை கட்டணம் ரூ.100 அடங்கும்.

வாகன பதிவு விவரங்கள், வாகன உரிமையாளர்களின் பெய ரில் குளறுபடி இருப்பவர்களுக்கு ‘பாஸ்டேக்’ கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. சில சுங்கச்சாவடி களில் ‘பாஸ்டேக்’ அட்டைகள் இருப்பு இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. எனவே, இந்த சிக் கல்களை தவிர்க்க, ‘பாஸ்டேக்’ அட்டையை வட்டாரப் போக்கு வரத்து அலுவலகங்களில் (ஆர்டீஓ) விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து வாகன உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள் சிலர் கூறிய தாவது:

இனி ‘பாஸ்டேக்’ அட்டை கட்டா யம் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. ஆனால், போதிய அளவில் ‘பாஸ்டேக்’ அட்டை கிடைப்பது இல்லை. இத னால், வாகன ஓட்டிகள் அலைக் கழிக்கப்படுகின்றனர். சுங்கச்சாவடி களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஒருசில தனி யார் வங்கிகள் மூலமாக மட்டுமே வழங்கப்படுவதால், மாவட்டங்கள், இதர பகுதிகளில் கிடைப்பதில் சிக் கல் இருக்கிறது.

சில சுங்கச்சாவடிகளில் ‘நெட் வொர்க்’ பிரச்சினையும் இருக்கிறது. இதனால், ‘பாஸ்டேக்’ பொருத்தியும் பயன் இல்லாத நிலை உள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஆர்டீஓ அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களிலும் ‘பாஸ் டேக்’ அட்டைகளை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

‘பாஸ்டேக்’ அட்டை திட்டம் வர வேற்கத்தக்கது. ‘பாஸ்டேக்’ அட்டை பெற வாகனம் மற்றும் உரிமை யாளர் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், பலரும் ஆர்டீஓ அலுவலகங்க ளுக்கு வந்து விவரங்களை பெற்றுச் செல்கின்றனர்.

மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறி வுறுத்தினால், ஆர்டீஓ அலுவல கங்களில் இதற்கென தனியாக வசதியை ஏற்படுத்தலாம். ஆனால், இங்கு ஆள் பற்றாக்குறை இருக் கிறது. எனவே, தனியார் நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்து, ஆர்டீஓ அலுவலகங்களில் ‘பாஸ்டேக்’ அட்டை வழங்கும் பணியை மேற் கொள்ளலாம்.

‘பாஸ்டேக்’ திட்டத்தை முழுக்க வங்கிகள் மூலமாகவே தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற் கொண்டு வருகிறது. இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இதுதொடர்பாக அரசு உத்தரவு வந்தால், ஆலோசிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘பாஸ் டேக்’ முறை கட்டாயம் ஆக்கப் பட்டுள்ள போதிலும், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் அதிகம் கெடுபிடி காட்டுவது இல்லை. சுங்கச்சாவடிகளில் தலா 2 பாதைகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்த அனுமதிக்கிறோம்.

திடீ ரென வாகன நெரிசல் ஏற்படும் போது, கூடுதலாக ஓரிரு பாதை களில் பணம் செலுத்தி செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பதால் வங்கிகள் மூலம் ‘பாஸ்டேக்’ அட்டைகளை விநியோகம் செய் வதே சரியாக இருக்கும்.

சுங்கச்சாவடிகளின் மொத்த வசூலில் தற்போது சுமார் 40 சதவீதம் அளவுக்கு ‘பாஸ்டேக்’ அட்டை மூலம் கிடைக்கிறது. ‘பாஸ்டேக்’ அட்டைகளை தாமதமின்றி வழங்கு மாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். எனவே, ‘பாஸ்டேக்’ பயன்பாடு படிப்படியாக அதிக ரிக்கும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT