பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிர்பயா நிதி ரூ. 190 கோடியில் ரூ.6 கோடி மட் டுமே செலவிடப்பட்டுள்ளது. எனவே. இந்த நிதியை முழுமை யாக செலவிடுவதை கண்காணிக்க உயர் நிலைக்குழு அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வித மாக நிர்பயா நிதியம் என்ற நிதியை மத்திய அரசு உருவாக்கியது.
இதற்கு தொடக்கமாக ரூ.10,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி யது. இதில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
நிர்பயா திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியில் தமிழக அரசு வெறும் ரூ. 6 கோடியை மட்டுமே செலவழித்துள்ளதாகவும் மீதித்தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டதாகவும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 2019 ஜனவரி முதல் மே வரை 151 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்ஸோ சட்டத்தின் கீழ் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் பெண் களுக்கு எதிராக 10 ஆயிரம் குற்றவழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக் காக ஆண்டுதோறும் மத்திய அரசிடம் இருந்து பெறும் நிதியை முழுமையாக 100 சதவீதம் செல விடுவதை கண்காணித்து, உறுதி செய்ய உயர் நிலைக் குழு ஒன்றை அமைக்க தமிழக உள்துறை செய லாளருக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.