தமிழகம்

நாட்டு நலப்பணி திட்டத்துக்கான மத்திய அரசு நிதி திடீர் நிறுத்தம்: பள்ளி, கல்லூரிகளில் என்எஸ்எஸ் செயல்பாடு முடங்கியது

ஜெ.கு.லிஸ்பன் குமார்

நாட்டு நலப்பணி திட்டத்துக்கான மத்திய அரசு நிதி நிறுத்தப்பட்டுள் ளதால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி களில் என்எஸ்எஸ் செயல்பாடு முடங்கிவிட்டது.

மாணவர்களுக்கு இளமைப் பருவத் தில் சமூக உணர்வையும், நாட்டுப்பற் றையும் வளர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் என்எஸ்எஸ் எனப்படும் தேசிய நாட்டு நலப்பணி திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத் தில் மொத்தம் 4 லட்சத்து 11 ஆயிரம் பேர் என்எஸ்எஸ் தொண்டர்களாக உள்ளனர்.

இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையும், மாநில அரசும் 7:5 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. சராசரியாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.9 கோடியை மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு தன் பங்காக ரூ.5.5 கோடி ஒதுக்கீடு செய்கிறது.

பள்ளி, கல்லூரிகளில் என்எஸ்எஸ் மாணவர்கள் 2 விதமான பணிகளில் ஈடுபடுகின்ற னர். தாங்கள் படிக்கும் கல்வி வளாகத்தை தூய்மைப்படுத்துவது, ரத்ததான முகாம், விழிப்புணர்வு பேரணி மேற்கொள்வது, கோயில் கள், புராதன சின்னங்களை தூய் மைப்படுத்துவது போன்றவை அன்றாட பணிகளாகவும், ஏதேனும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு முகாமிட்டு பணிகள் செய்வது சிறப்புப் பணியாகவும் கருதப்படுகிறது.

என்எஸ்எஸ் திட்டத்தில் அன்றாட பணிகளுக்காக ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு ரூ.250-ம் சிறப்பு முகாம் பணிக்காக ரூ.450-ம் செலவு செய்கின்றனர். இந்நிலையில், 2014-15 கல்வியாண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. என்எஸ்எஸ் நிதி பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பான பயன்பாட்டு சான்றிதழ் திருப்தியாக இல்லாததால்தான் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக கூறப் படுகிறது.

மத்திய அரசு நிதி ஒதுக்கீடு வராத நிலையில், தமிழக அரசு தன் பங்குக்கு 2014-15ம் ஆண்டில் ஒதுக்கிய ரூ.4.37 கோடியை செலவிட முடியாமல் மீண் டும் அரசுக்கே திருப்பி அனுப்ப வேண் டிய நிலைக்கு மாநில என்எஸ்எஸ் அலுவலகம் தள்ளப்பட்டது. இதுகுறித்து என்எஸ்எஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

கடந்த 2011 முதல் 2014 வரை யிலான காலகட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை பயன்படுத் தியது தொடர்பான அறிக்கையை மத்திய அரசு கேட்டது. நாங்களும் தேவையான விவரங்களுடன் அறிக்கை அனுப்பினோம். ஆனால், அதில் திருப்தி அடையாமல் தொடர்ந்து விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஜனவரி முதல் இதே நிலைதான்.

தமிழகத்தைப் பொறுத்தவரை யில், மற்ற மாநிலங்களைப்போல இல்லாமல் என்எஸ்எஸ் நிதியானது பள்ளிக்கல்வி, உயர்கல்வி என தனித்தனி துறைகள் மூலம் பயன் படுத்தப்படுகிறது. அதனால்தான் நிதி பயன்பாட்டு சான்றிதழ் அளிப் பதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்போது கூட மத்திய அரசு கேட்டுள்ள விவரங் களுடன் பயன்பாட்டு அறிக்கையை அனுப்பியுள்ளோம். நடப்பு ஆண்டுக்கு (2015-16) மத்திய நிதி ஒதுக்கீடு கிடைக் கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே, நிதி ஒதுக்கப் படாததால் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் என்எஸ்எஸ் பணிகள் முடங்கிப்போயுள்ளதாக பொறுப் பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

SCROLL FOR NEXT