பிரதிநிதித்துவ படம். 
தமிழகம்

குடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார் தடுப்பு

செய்திப்பிரிவு

சென்னை மெரினா கடற்கரையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களைத் தடுத்து போலீஸார் வள்ளுவர் கோட்டத்திற்கு அருகே அனுப்பினர்.

சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றிணைந்த இவர்கள் மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல்குளம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது அங்கு வந்த போலீசார் இளைஞர்களின் போராட்டத்தைத் தடுத்தனர்.

உரிய அனுமதி இன்றி போராட்டம் நடத்த முடியாது என்றும் மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களை போலீசார் எச்சரித்தனர்.

இதனையடுத்து அங்கு கூடியிருந்த 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் வள்ளுவர் கோட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது வள்ளுவர் கோட்டத்தில் வைத்து போராட்டம் நடத்தி வரும் அவர்கள் இன்று மாலை வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT