தமிழகம்

திருவாரூரில் வாக்காளர் பட்டியலைக் கிழித்து கழிவறையில் வீசியதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

திருவாரூர் அருகே வடகண்டத்தில் ஊராட்சி அலுவலகப் பூட்டை உடைத்து வாக்காளர் பட்டியலைக் கிழித்து வீசிய சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வடகண்டம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் போட்டிக்கு 26 பேர் மனுதாக்கல் செய்தனர்.

அறையைப் பூட்டிச் சென்ற ஊராட்சிச் செயலர் இன்று வழக்கம் போல் ஊராட்சி அலுவலகம் வந்த நிலையில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வேட்பு மனுக்களை மர்ம நபர்கள் கிழித்து எறிந்ததாகத் தகவல் பரவியது. ஆனால் அவர்கள் வாக்காளர்ப் பட்டியலை கிழித்து கழிவறையில் வீசியிருந்ததோடு ரூ.1500 திருடப்பட்டதும் தெரியவந்தது.

ஆனால் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பத்திரமாக இருப்பதாக உதவி தேர்தல் அலுவலர் சிங்கார வேலன் தனியார் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT