கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்த ஜெய்ஷ்-இ-முகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கங்களைச் சேர்ந்த தீவிர வாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் டெல்லி போலீ ஸார் 5 பேர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பெண் காவலர், ஊழியர்கள் 2 பேர், தோட்டக்காரர் ஒருவர் என 9 பேர் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் உயிரி ழந்த வீரர்களின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந் தன. படங்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்க ளவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
மாநிலங்களவையிலும் வீரர் களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட் டது. அவைத் தலைவர் வெங் கய்ய நாயுடு கூறுகையில், ‘‘தீவிர வாதிகள் தாக்குதலில் இறந்த வீரர்களின் உயர்ந்த தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்கிறோம். அவர்களின் தன்னலமற்ற தியாகம் துணிச்சலுக்கும் கடமை உணர்வுக்கும் உதாரணம். தீவிர வாதத்துக்கு எதிராக போராடு வதில் மாநிலங்களவை தனது உறுதியை தெரிவிக்கிறது’’ என்றார். உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.