தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் தனிச் சின்னம் கேட்டு தமாகா தொடர்ந்த வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு 

செய்திப்பிரிவு

உள்ளாட்சி தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கக்கோரி தமாகா சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமாகா, அப்போது நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேர வை தேர்தல்களில் சைக்கிள் சின் னத்தில் போட்டியிட்டது. 2002-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைந்தது. அதன்பிறகு மீண்டும் 2014-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி தமாகா மீண்டும் உருவானது.

கடந்த தேர்தல்களைப் போலவே உள்ளாட்சி தேர்தலை யும் தமாகா எதிர்கொள்ளவிருப் பதால், உள்ளாட்சி தேர்தலுக்கு சைக்கிள், மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்க்ஷா சின் னத்தை ஒதுக்கிக்கொடுக்க தேர் தல் ஆணையத்துக்கு விண்ணப் பித்தும் அதை ஆணையம் நிராகரித்துவிட்டது. எனவே 3 சின்னங்களில் ஏதாவது ஒன்றை எங்களது கட்சிக்கு ஒதுக்கிக்கொடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக நடந்தது. அப்போது சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக்கோரிய வழக்கு வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கையும் அதே அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது உள்ளாட்சி தேர்தலுக்காக சின்னம் ஒதுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ள தாக நீதிபதிகளின் கவனத் துக்கு கொண்டுவரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்குகள் மீதான விசார ணையை வரும் டிச.16-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT