குழந்தை திருமணத்தைத் தடுப்பது தொடர்பாக தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி செயல்திட்டங்கள் உரு வாக்கப்பட உள்ளதாக சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும், ஆண் களுக்கு 21 வயதாகவும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் திருமணம் செய்து வைப்பது குழந்தை திருமணமாகக் கருதப்படும்.
குழந்தை திருமணங்களைத் தடுக்க சைல்டு ஹெல்ப் லைன் நம்பர் ‘1098’ எண்ணில் புகார் அளிக் கலாம். இதுதவிர, குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டமும் நடை முறையில் இருந்து வருகிறது. இருப்பினும், குழந்தை திருமணங் கள் தொடர்கின்றன. எனவே, குழந்தை திருமணத்தைத் தடுப்ப தற்கான செயல் திட்டங்களை உருவாக்க சமூகநலத் துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: குழந்தை திருமணத்தை பெற்றோர்கள் விருப்பப்பட்டு செய்து வைப்பதால் முழுமையாகத் தடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குழந்தை திருமணம் நடைபெறு வதாக தகவல் கிடைக்கும்போது, விரைந்து சென்று காவல்துறை உதவியுடன் தடுக்கப்படுகின்றன. இருப்பினும், முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை.
இதனால் குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். தேனி, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக ஆய்வு நடத்த உள்ளோம்.
குழந்தை திருமணங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டு அதற் கான செயல் திட்டங்கள் உரு வாக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான பணிகள் துரிதப் படுத்தப்படும். பெற்றோர்கள் மத்தி யில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.