பப்ஜி கேம் விளையாட்டின் ஆபத்துக் குறித்து ராமதாஸ் பதிவிட, அதைவிட ஆபத்து குடியுரிமை திருத்த மசோதா அதை உங்கள் மகன் ஆதரித்து வாக்களித்துள்ளார், உங்கள் மகனும் நீங்களும் இஸ்லாமியர், இலங்கைத்தமிழர் நலன் ஆடுவது என்ன மாதிரியான விளையாட்டு என கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த வருகின்றன. இந்த சட்டத்தை தமிழகத்தில் திமுக கூட்டணிக்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இலங்கைத்தமிழர்களுக்கு மறுப்பு, முஸ்லீம்களுக்கு மறுப்பு என்பதால் இதை பலரும் எதிர்க்கின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது அதிமுக, பாஜக கூட்டணியில் இருப்பதால் மவுனம் காப்பதுமல்லாமல் அக்கட்சி ஆதரித்து வாக்களித்தது. இதற்கு கடும் விமர்சனம் எழுந்துவருகிறது. இந்நிலையில் ராமதாஸ் ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில்,
“குவாலியர் -ஆக்ரா தொடர்வண்டியில் செல்பேசியில் பப்ஜி விளையாடிக்கொண்டே சென்ற பொற்கொல்லர் தண்ணீருக்கு பதில் அமிலத்தை குடித்து உயிரிழந்துள்ளார்.பப்ஜி எவ்வளவு ஆபத்தான விளையாட்டு என்பதற்கு இதை விட சிறந்த ஆதாரம் தேவையில்லை. உயிர்க்கொல்லி விளையாட்டான பப்ஜி உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்”. என்று பதிவிட்டிருந்தார்.
இதன்கீழே திமுக தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் பதில் கேட்டு பதிவிட்டுள்ளார்.
அவரது ட்வீட்:
“ஐயா , @drramadoss நம் கட்சி சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் #குடியுரிமை_மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்., இஸ்லாமிய மற்றும் இலங்கை தமிழர்கள் குறித்து இது என்ன மாதிரி ஆன அரசியல் விளையாட்டு என்று கொஞ்சம் கருத்து கூறினால் மக்கள் உங்கள் சுயநலத்தை புரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்”.
என ட்விட்டில் கேட்டுள்ளார்.
இதற்கு கீழே நெட்டிசன்கள் பாமகவையும், அதன் நிறுவனர் ராமதாஸையும் விமர்சித்துள்ளனர்.