தமிழகம்

ரணில் விக்ரமசிங்கேவுக்கு கருணாநிதி, வாசன் வாழ்த்து

செய்திப்பிரிவு

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகி யோர் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கூட் டணி 45.7 சதவீத வாக்குகளுடன் 93 இடங்களிலும், ராஜபக்சவின் சுதந்திர கட்சி 42.4 சதவீத வாக்குகளுடன் 83 இடங்களிலும், தமிழ் தேசியக் கூட்டணி 14 இடங் களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு திமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை அதிபராக இருந்த ராஜபக்ச, நாடாளுமன்றத் தேர்த லில் தோல்வி அடைந்து பிரதமர் பதவி வாய்ப்பையும் இழந்துள் ளார். ஆனாலும் அவரது கட்சி 83 இடங்களில் வென்றுள்ளது. அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்த 20-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, விரை வில் இலங்கையில் நாடாளு மன்ற ஜனநாயக முறை நடை முறைக்கு வரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டணி பெற்றுள்ள வெற்றி, ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளது என நம்பலாம். இந்தச் சூழ்நிலையில் தமிழர்களுக்கு சம உரிமையுடன் கூடிய கண்ணியமான, அமைதியான வாழ்வு அமைய வழி ஏற்படும்.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை யில், ‘இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச தோல்வி அடைந்திருப்பது தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கு இழைத்த அநீதியால் ராஜபக்ச தோல்வி அடைந்துள்ளார். புதிய பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கு தமாகா சார்பில் வாழ்த்து களை தெரிவித்துக் கொள் கிறேன். தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர் செயல்படுவார் என நம்பு கிறேன். தமிழர்களின் நீண்ட கால பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்பட ரணில் விக்ரமசிங்கே வழிகாண வேண்டும்’ என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT