அருணாசல பிரதேசத்தில் பனிச் சரிவால் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த கிருஷ்ணகிரி ராணுவ வீரர் சந்தோஷின் உடல், அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்ப னப்பள்ளி ஊராட்சி கும்மனூரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சந்தோஷ்(23). ராணுவ வீரரான இவர், மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் சாப்பர் கிரேடு பிரிவில் பணியாற்றி வந்தார்.
அருணாசல பிரதேசம் ரியாண்டு மலைப்பகுதியில் கடந்த 8-ம் தேதி பொறியாளர் குழுவினர் வாகனம் மூலம் வேறு இடத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பனிச்சரிவால் ஏற்பட்ட வாகன விபத்தில் சந்தோஷ் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இறந்த ராணுவ வீரர் சந்தோ ஷின் உடல் விமானம் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு வரப் பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊரான திப்பனப்பள்ளி ஊராட்சி கும்மனூருக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், ஏடிஎஸ்பி சக்திவேல் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ராணுவ வீரரின் தந்தை நட ராஜன், தாய் சித்ரா, அக்கா கோகிலா, தங்கை சவுந்தர்யா மற்றும் குடும்பத்தினருக்கு ஆட்சி யர் ஆறுதல் கூறினார்.
அப்போது முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் பிரேமா, வட்டாட்சியர் ஜெய் சங்கர் மற்றும் காவல் துறை யினர் உடன் இருந்தனர். இதை யடுத்து, ராணுவ அலுவலர் சின்ன ராஜ் தலைமையில் 24 வீரர்கள் சந்தோஷின் உடலை ராணுவ மரியாதையுடன் எடுத்து சென்ற னர். தொடர்ந்து 42 குண்டுகள் முழங்க சந்தோஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.