தமிழகம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்: அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை

பேரறிவாளனின் ஒரு மாத பரோல் காலம் நேற்றுடன் முடிவடைந்த தால், அவரது பரோலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண் டும் என அவரது தாயார் அற்புதம் மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதனையேற்று, பேரறி வாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார்.

இந்நிலையில், அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை அருகே இருந்து கவனித்துக் கொள்ளவும், பேரறிவாளனின் சகோதரி மகள் திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளவும் பேரறி வாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 12-ம் தேதி பேரறி வாளன் ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார். சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு வந்த பேரறிவாளன் அங்கிருந்து ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

30 நாட்களுக்கு கையெழுத்து

அங்கு தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்தார். சிறைத்துறை உத்தரவுப்படி 30 நாட்களும் ஜோலார்பேட்டை போலீ ஸார், பேரறிவாளன் வீட்டுக்கு சென்று கையெழுத்து பெற்றனர். ஒரு மாதம் வீட்டில் இருந்த பேரறிவாளன் தனது தந்தையை உடனிருந்து கவனித்துக் கொண்டார். கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடை பெற்ற சகோதரியின் மகள் திருமணத்திலும் அவர் கலந்து கொண்டார்.

இந்நிலையில், பேரறிவாள னுக்கு வழங்கப்பட்ட ஒரு மாதம் பரோல் நேற்றுடன் (டிச.12-ம் தேதி) முடிவடைந்தது. இதையொட்டி, அவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்து வந்தனர்.

தாயின் கோரிக்கையை ஏற்று

இந்நிலையில், குயில்தாசன் உடல் நிலையை காரணம் காட்டி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கோரிக்கை மனுவை நேற்று அனுப்பினார்.

அற்புதம்மாளின் கோரிக் கையை ஏற்று பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT