தென் மாவட்டங்களில் அதிமுக உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக, பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காமல் அதிருப்தியடைந்துள்ளன.
உள்ளாட்சி தேர்தலை நடத்தத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், திட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுக, திமுக கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’கள் ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தென் மாவட்டங்களில் அதிமுகவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பே ஓரளவு கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்கிவிட்டனர். ஆனால், அதிமுக ஒதுக்கிய இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக பாமக, தேமுதிக நிர்வாகிகள் மிகப்பெரிய வருத்தத்தில் இருப்பதாகவும், அவர்கள் தங்கள் அதிருப்தியை கட்சி மேலிடத்துக்குத் தெரிவித் துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேமுதிக நிர்வாகிகள் சிலர் சுயேச்சையாக களம் இறங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கான இடங்களை முடிவு செய்துவிட்டார்.
அதேபோல், மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்த இடங்களை உறுதி செய்துவிட்டார்.
இருவரும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து, கட்சி மேலிடத்துக்கு அனுப்பி விட்டனர். ஒப்பு தல் கிடைத்ததும் வேட்பாளர் பட்டியலை வெளி யிட்டு உடனடியாக வேட்பு மனுத்தாக்கல் செய்ய வுள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.