மகாகவி பாரதியின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அரண்மனை முன் பாரதியார் வேடத்தில் அணிவகுத்து நின்ற மாணவ - மாணவியர். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

மகாகவி பாரதியின் 138-வது பிறந்தநாள்: எட்டயபுரத்தில் ‘பாரதி’ ஊர்வலம்

செய்திப்பிரிவு

மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப் பள்ளி மாணவ- மாணவியர் 100-க்கும் மேற்பட் டோர் பாரதி வேடமிட்டு, எட்டய புரம் அரண்மனை முன்பு ஒன்று திரண்டனர். ‘‘பெண் குழந்தை களை போற்றி பாதுகாப்போம், குழந்தை தொழிலாளர் முறையை அறவே ஒழிப்போம், பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல் களை தடுத்து நிறுத்துவோம்’’ என அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் தலைமை வகித்தார். கோலாட்டம், சிலம்பம் ஆடியபடி மாணவ - மாணவியர் ஊர்வலமாகச் சென்றனர். ஊர் வலம், பாரதி பிறந்த இல்லத்துக்கு சென்றதும், அங்குள்ள பாரதியின் சிலைக்கு மாணவ - மாணவியர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அனைத்திந்திய தமிழ் எழுத் தாளர்கள் சங்கம் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT