சவுகார்பேட்டையில் 5-வது மாடி யில் இருந்து கீழே விழுந்த குழந்தை, இருசக்கர வாகனத்தின் சீட்டில் விழுந்ததால் லேசான காயத்துடன் உயிர்பிழைத்தது.
விசாகபட்டினத்தைச் சேர்ந்த மைபால் என்பவர் குடும்பத்தின ருடன் சென்னை சவுகார்பேட்டை யில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5-வது தளத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் மைபாலின் மனைவி நீலம், ஜினிஷா என்கிற 8 மாத குழந்தையுடன் தங்கியிருந் தனர். நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் வீட்டின் ஹாலில் உறவினர்கள் இருந்தபோது, படுக் கையறையில் தூங்கிய ஜினிஷா விழித்து, எழுந்து மெல்ல மெல்ல தவழ்ந்து படுக்கையறையை ஒட்டி யுள்ள பால்கனிக்குச் சென்றது. பால்கனி தடுப்பு கம்பிகள் அதிக இடைவெளியில் வைக்கப்பட் டிருந்ததால் அதில் வலை ஒன்றும் பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால், வலையின் ஒரு ஓரம் தளர்ந்த நிலையில் இருந்துள் ளது. குழந்தை ஜினிஷா அதன் வழியாக 5-வது தளத்தில் இருந்து கீழே விழுந்தது.
குழந்தை நேரடியாக தரையில் விழாமல் அங்கிருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையில் விழுந்து பின்னர் தரையில் சரிந்தது. இதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஓடிச்சென்று அசைவற்று கிடந்த குழந்தையின் நெஞ்சில் கை வைத்து அழுத்தியவுடன் குழந்தை அழுது இருக்கிறது. வலியில் துடித்த குழந்தையை அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளருடன் அந்த ஆட்டோ ஓட்டுநர் மருத்துவ மனையில் சேர்த்தார்.
குழந்தை எந்த தளத்தில் இருந்து விழுந்தது என்பதை கவனிக் காததால் குழந்தை யாருடையது எனத் தெரியவில்லை. அதற்குள் மருத்துவமனையில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் செல்போனில் தக வல் சொல்லி விசாரித்தபோதுதான் அது மைபாலின் குழந்தை என் பது தெரியவந்தது. குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக் கும்வரை பெற்றோருக்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியவில்லை. அதற்கு பிறகுதான் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து குழந்தை சிறிய அளவிலான எலும்பு முறி வுடன் உயிர் தப்பியதை எண்ணி மகிழ்ச்சியடைந்தனர்.
புகார் கொடுக்கப்படவில்லை எனினும் சம்பவம் குறித்து யானை கவுனி போலீஸார் விசாரணை நடத்தினர். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் குழந்தைகளுக்கு பாதுகாப்பில் லாத வகையில் இருக்கும் பகுதி களில் கவனம் செலுத்த வேண்டும். பால்கனியில் உரிய தடுப்புகளை ஏற்படுத்தி, அவ்வப்போது கண் காணிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தினர்.