விபத்தில் சிக்கி அசைவற்றுக் கிடந்த முதியவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் அளித்து காப் பாற்றிய காவலர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், காவலருக்கு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் பிராட்டியூ ரைச் சேர்ந்தவர் அப்துல்காதர்(65). இவர் தனது மனைவி, பேரனுடன் கடந்த நவ.6-ம் தேதி இரவு நவலூர் குட்டப்பட்டிலுள்ள மகள் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். வண் ணாங்கோவில் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த ஒரு கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படாத நிலையில், அப்துல்காதர் மட்டும் சுயநினைவின்றி அசைவற்றுக் கிடந்தார். அப்போது, அந்த வழி யாக நெடுஞ்சாலை ரோந்து வாக னத்தில் அங்கு வந்த காவலர் வி.பிரபு, உடனடியாக அப்துல் காதரின் மார்பில் கை வைத்து பலமுறை அழுத்தியதுடன், வாய் வழியாக செயற்கை சுவாசம் கொடுத்தார். இதன் பலனாக அப்துல்காதர் மீண்டும் கண் விழித்து, இயல்பு நிலைக்குத் திரும் பினார். இந்தக் காட்சிகளை அவ் வழியாக பயணம் செய்த ஒருவர், செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து காவலர் பிரபுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: 2013-ல் காவல்துறையில் பணிக் குச் சேர்ந்தேன். தற்போது, மாநில பேரிடர் மீட்பு படையிலும் உள்ளேன். சம்பவத்தன்று, விபத் தில் சிக்கிய அப்துல்காதர் ஹெல் மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் ஏற்படவில்லை. ஆனால், அவர் அசைவற்று கிடந்ததால், இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர்.
இதுபோன்ற சமயங்களில் உடனடியாக செயற்கை சுவாசம் அளித்து, உயிரைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் என காவலர் பயிற்சி மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை பயிற்சியின்போது சொல்லிக் கொடுத்தனர். அதன் படி, தொடர்ந்து 3 நிமிடங்கள் செயற்கை சுவாசம் கொடுத்தேன். சிறிதுநேரத்தில் அவர் கண்விழித்து, நன்றாக மூச்சுவிட்டு, இயல்பு நிலைக்கு திரும்பினார். இப்படி செய்தால் 70 சதவீதம் உயிரைக் காப்பாற்றி விடலாம்.
ஐஜி பாராட்டு
இதுபோல பலமுறை செய் துள்ளேன். ஒரு மாதத்துக்கு முன் நடந்த இந்நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பரவுவதால், ஏராளமானோர் என்னை அழைத்து பாராட்டுவது மகிழ்ச்சியாக உள் ளது என்றார். இதற்கிடையே, மத்திய மண்டல ஐ.ஜி அலுவலகம், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் தொடர்பு கொண்டு பிரபுவை பாராட்டினர்.