பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் சின்ன வெங்காயம் திருடு போன வெங்காயப் பட்டறை. 
தமிழகம்

பெரம்பலூர் அருகே 400 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

செய்திப்பிரிவு

பெரம்பலூர் அருகே 400 கிலோ சின்ன வெங்காயத்தை திருடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் மிக அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை விவ சாயிகள் வயல்களிலேயே பட்டறை அமைத்து சேமித்து வைப்பது வழக்கம்.

தற்போது வெங்காயம் அதிக விலைக்கு விற்கப்படும் நிலையில் பட்டறைகளில் சேமித்து வைக்கப் படும் வெங்காயத்தை பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த வாரம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ் ணன் என்பவரது வயலில் விதைப் பதற்காக வாங்கி வைத்திருந்த 300 கிலோ சின்னவெங்காயம் திருடுபோனது. இதை திருடிய நபரை போலீஸார் இதுவரை கைது செய்யவில்லை. இந்நிலையில் நேற்று செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது வய லில் பட்டறையில் சேமித்து வைக் கப்பட்டிருந்த 400 கிலோ வெங் காயம் திருடு போனது. இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT