தமிழகம்

கனிம வளங்களுக்காக தொடர்ந்து அழிப்பு : 20 ஆண்டுகளில் 11% காணாமல்போன மேற்குதொடர்ச்சி மலை

எல்.மோகன்

உலகின் 15 சதவீத மக்கள், 25 சதவீத விலங்குகள் மலைகளில் வசிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களுக்கும் தேவையான நன்னீரை மலைகள் தருகின்றன.

மலைகளின் முக்கியத்துவத்தை கருதி, அவற்றை பாதுகாக்கும் வகையில் 2002-ம் ஆண்டை பன்னாட்டு மலைகளின் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக 2003-ம் ஆண்டு முதல் டிச.11-ம் தேதியை ‘சர்வதேச மலைகள் தினமாக’ உலக நாடுகள் கடைபிடித்து வருகின்றன.

இன்றைய சூழலில் மலைகள் பேரழிவுகளை எதிர்கொள்கின்றன. காலநிலை மாற்றங்கள், கனிம வளங்களுக்காக பெயர்த்து எடுத்தல் போன்றவற்றால் மலைவளங்களும், மலைகளின் மென்மையான சூழலும் அழிந்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகள் நிறைந்த தமிழகத்தில் மலைகளில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள்
கனிம வளங்களுக்காக அச்சுறுத்தப்படுகின்றனர். விலங்குகள், தாவரங்கள் மற்றும் பல்லுயிர்கள் அழிக்கப்படுகின்றன.

இதுகுறித்து சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் தெற்காசிய உறுப்பினர் டேவிட்சன் சற்குணம் கூறியதாவது: கன்னியாகுமரியில் தொடங்கி குஜராத் வரை நீண்ட பரந்த இயற்கை வளம் நிறைந்த பகுதியாக மேற்குதொடர்ச்சி மலை உள்ளது. இப்பகுதியின் செழிப்புக்கு 60 சதவீதத்துக்கும் மேல் இந்த மலைதான் காரணம்.
முதலிடத்தில் கேரளாமேற்குதொடர்ச்சி மலையில் பல ஆயிரம் ஏக்கரில் தேயிலை, கிராம்பு, ரப்பர் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதனால், வனங்களில் பறவைகள், விலங்குகளுக்கு ஏற்ற உணவு, தட்பவெப்பம் கிடைக்காமல், அவை வாழும் சூழல் குறைந்து வருகிறது.

நிலப்பரப்புபோல் இல்லாமல் மலைப்பகுதிகளில் இயற்கையாகவே அனைத்து பயிர், மரங்களை வளர விடவேண்டும். யூகலிப்டஸ் போன்ற ரசாயனத்தன்மை கொண்ட வெளிநாட்டு மரங்கள், தாவரங்கள் மலைவளங்களை அழித்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மலைகளில் உள்ள இயற்கை வளங்களை எளிதில் சுரண்ட முடியாது.

தமிழகம் உள்ளிட்ட பிற பகுதிகளில் பாறை மற்றும் கனிம வளங்களுக்காக மேற்கு தொடர்ச்சி மலை அழிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளால் மலைகளில் உள்ள இயற்கை வளங்கள் அழிவதுடன் பறவை, விலங்குகளின் வாழிடங்களும் கேள்விக்குறியாகின்றன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கணக்கெடுப்பின்படி மனித தலையீடுகளால் கடந்த 20 ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் 11 சதவீதம் அழிந்துபோயுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பகுதி காணாமல் போய்விடும்.

காலநிலைகளை தீர்மானிப்

பதுடன், பருவமழை, விவசாயம், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி, உணவு உற்பத்தி, கால்நடை தீவனங்கள், இயற்கை சூழலை சீராக வைத்தல் போன்றவற்றின் காரணியாக விளங்கும் மலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். இயற்கை தந்த அருட்கொடையான மலைகளை அழிவுப் பாதையில் இருந்து பாதுகாக்க அரசு மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என்றார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பரந்து விரிந்து காணப்படும் மேற்கு தொடர்ச்சிமலை. (அடுத்த படம்) குமரியில் பாறைகளுக்காக சிதைக்கப்பட்டுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி.

SCROLL FOR NEXT