தமிழகம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் தீராத தொல்லை

செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத் தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பல ஆக்கப்பூர்வமான பிரச்சினைக ளுக்கு மனுக்கள் வருவதும் அவைகள் உரிய முறையில் பரிசீலிக்கப் படுவதும் தொடர்ந்து நடந்து வரு கிறது.

அதற்கு மத்தியில் சில விசித் திர முறையீட்டு மனுக்களும் அவ்வப்போது வந்து, ஆட்சியரக ஊழியர் களை கலங்கடிப்பதுண்டு.

வழக்கம் போல் நேற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில், மனு அளிக்க வந்த விழுப்புரம், கே.கே ரோட்டில் வசிக் கும் தசரதன் என்கிற ராமசாமி கூறியது:நான், தற்போது குடும்பத்தை விட்டு விலகி, நாட்டுக்காக முழு நேர சேவை செய்து வருகிறேன். நான் வீரபாண்டிய கட்டபொம்மனின் மறுபிறவி. நம் நாட்டின் இயற்கைவளத்தை அழித்து, பொருளாதா ரத்தை சீர்குலைத்து, பருவநிலை மாற்றம் செய்து நாசவேலை செய்துவரும் நிழல் தீவிரவாதிகள் பற்றி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் விசாரணை நடத்த தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே என் புகாருக்கு தீர்வு கிடைக்கும் வரை விழுப்புரம் மேற்குகாவல்நிலைய ஆண்கள் சிறைஅறையில் (லாக்கப்பில்)ஒரு நாளில்3 மணி நேரம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தியானபோராட்டம் நடத்த உத்தேசித்துள் ளேன். இதற்கு அனுமதி அளித்தால் தமிழகத்தில் தலைகுனிந்துள்ள விவசாயம் செழிக்கும். நல்ல மழை பொழியும். எனவே என் தியானப் போராட்டத்திற்கு அனுமதியும், ஆதரவும் வழங்குமாறு ஆட்சியரி டம் மனு அளிக்க உள்ளேன் என்றார்.

இதே போல், வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு மேல் சட்டை அணியாமல் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்த ஒருவர், என்னைத் தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் நடவ டிக்கை எடுத்துள்ளனர். ஆனால், தாக்குதலுக்குள்ளான எனக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்க மறுக்கின்றனர். என்னை ஆண்கள் தொடக்கூடாது. பெண்கள் மட்டுமே தொடவேண்டும் என்றுஏதேதோ கூறி, கையில் மனுவை வைத்துக் கொண்டு கூட்டத்தில் இங்கும் அங்கும் சென்று வந்தார். இதே போல, "நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்து விட்டேன்; என்னை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். கொசுக்களை அழிக்க மருந்து கண்டு பிடித்துள்ளனர். இதனை மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்ப ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றெல்லாம் கடந்த சில வாரங்களில் திங்கள் கிழமைகளில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனுக்களுடன் வந்தவர்கள் உண்டு.

இப்படி, நம் கற்பனைக்கே எட்டாத பல விஷயங்களை மனுக்களாக கொண்டு வந்து குறைதீர்க் கும் முகாமில் கொடுப்பதாக ஆட் சியர் அலுவலக ஊழியர்கள் குமுறுகின்றனர்.

SCROLL FOR NEXT