தமிழகம் முழுவதும் உரிமம் பெறாமல் இயங்கி வரும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளீனிக்குகள், சிறிய அளவிலான மருத்துவ மையங்கள் உள்ளன.
இவை அனைத்தும் பதிவு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அப்படி பெறும் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப் பிக்க வேண்டும். உரிமத்துக்கு விண் ணப்பிப்பதற்கான காலஅவகாசம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந் தது. ஆனால், 24 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அதனால், காலஅவகாசம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது வரை 35 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதை யடுத்து விண்ணப்பித்த மருத்துவ மனைகளுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்கட்டமைப்பு வசதி கள், சிகிச்சை வசதிகள் போன்ற வற்றை ஆய்வு செய்து உரிமம் வழங்கி வருகின்றனர். உரிமம் பெற விண்ணப்பிக்காத மருத்துவ மனைகள், கிளீனிக்குகள் மீது நட வடிக்கை எடுக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.