கோப்புப்படம் 
தமிழகம்

மணலி ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: அன்னதான நிகழ்ச்சியில் தமிழிசை பங்கேற்பு

செய்திப்பிரிவு

மணலியில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஜோதி ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

சென்னையை அடுத்த மணலியில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஜோதி ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா, தந்திரி அண்டலாடி  பரமேஸ்வரன் நம்பூதிரி தலைமையில் கடந்த 6-ம் தேதி நடந்தது. அன்று மாலை நாதஸ்வர மங்கள இசை நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து 7-ம் தேதி பல்வேறு சிறப்பு பூஜைகள், பக்தி தெம்மாங்கு இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவருக்கு விழாக் குழுவினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அங்கு ஐயப்ப சுவாமியை தமிழிசை வழிபாடு செய்தார்.

அதைத் தொடர்ந்து 49-வது ஆண்டு விளக்கு பூஜையும் ஐயப்ப சுவாமி திருவீதி உலாவும் நடந்தன. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்த ஐயப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

SCROLL FOR NEXT