சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 448 கோயில்களில் நேற்று பொது விருந்து நடத்தப்பட்டது.
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடந்த பொது விருந்தில் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் பங்கேற்றார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். சென்னை பார்த்தசாரதி கோயிலில் 700 பேருக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. சுமார் 600 ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இதில் மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பங்கேற்றார். ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் கோயிலில் நடந்த பொது விருந்தில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பங்கேற்றார்.
பொது விருந்துகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.