தமிழகம்

விருதுநகரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார்.

காரியாபட்டி அருகே உள்ள அரசகுளத்தைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மகள் சஞ்சனா (4). கடந்த 10 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த 2-ம் தேதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, சிறுமி சஞ்சனாவுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வந்த சிறுமி சஞ்சனா இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அரசகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT