தமிழகம்

சிதம்பரத்தைப் பார்த்தேன்; சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்: வைரமுத்து ட்வீட்

செய்திப்பிரிவு

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்தது தொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில், "இன்று காலை ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்; சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
100 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் அவர் அண்மையில் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் அவரை கவிஞர் வைரமுத்து இன்று நேரில் சந்தித்தார்.

அந்த சந்திப்பை சிலாகித்து கவிதை பாணியில் ட்வீட் ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT