சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மழை வெள்ளத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றியதற்காக தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர்) நன்றி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பொன்னுப்பாண்டி பேசும்போது, ‘‘பெருமழை, வெள்ளத்தால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற 4 ஆயிரம் பக்தர்கள் மலையில் சிக்கிக்கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் அவர்களை பாதுகாப்பாக மீட்டது பாராட்டுக்குரியது. அதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் நன்றி’’ என்றார்.
இதைக் கேட்டதும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.