வெங்காய விலை உயர்வு மக் களைப் பாதிக்காமல் தடுப்பதற்காக தமிழக ரேஷன் கடைகளில் வெங் காயம் விற்பனை செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக உணவுத் துறை அமைச் சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் பல்வேறு கட்சியினர் அமைச்சர் ஆர்.காமராஜ் முன் னிலையில் அதிமுகவில் இணை யும் நிகழ்ச்சி அக்கட்சி அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:
வெங்காயம் விளை விக்கப்படும் பகுதிகளில் மழை கூடுதலாகப் பெய்துள்ளதால் தற்போது, விளைச்சல் பாதிக்கப்பட்டு வெங் காயத்தின் விலை அதிகரித் துள்ளது. இது நிரந்தரம் அல்ல. தற் போது, தமிழக அரசு வெங்காயத் தைக் கூடுதல் விலை கொடுத்து வாங்கி, பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங் காயத்தை இறக்குமதி செய்து, விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நட வடிக்கை எடுத்துள்ளது. இறக்கு மதி வெங்காயம், வரும் 12, 13 தேதிகளில் தமிழகத்துக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை கூட்டுறவுத் துறை அமைச் சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் திமுக வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பின் மூலம், நீதி வென்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.