திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற மகா தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள். 
தமிழகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம்: ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் 

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற மகா தேரோட்டத்தில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத் துடன் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. பின்னர், அண்ணா மலையார் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 1-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதன் பிறகு 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. அதில், 7-ம் நாள் உற்சவமான நேற்று மகா தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் னர், தனித்தனி திருத்தேர்களில் (பஞ்ச ரதங்கள்) பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியதும், தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காலை 7.25 மணிக்கு விநாயகர் திருத்தேர் புறப்பட்டு மாட வீதியில் வலம் வந்து, ஆஸ்தான மண்ட பத்தை வந்தடைந்தது. பின்னர், முருகர் திருத்தேர் புறப்பட்டு, மாட வீதியில் வலம் வந்து நிலையை அடைந்தது.

இதைத் தொடர்ந்து பெரிய தேர் என்றழைக்கப்படும் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் திருத்தே ருக்கு தீபாராதனை காட்டப்பட்ட தும், பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டது. இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆட்சியர் கந்த சாமி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து, திருத்தேர் பவனியை தொடங்கி வைத்தனர். அப்போது ‘அண்ணாமலையாருக்கு அரோ கரா’ என பக்தர்கள் முழக்கமிட்ட னர். மாட வீதியில் சுமார் 5 மணி நேரம் வலம் வந்து பக்தர் களுக்கு அண்ணாமலையார் அருள் பாலித்தார்.

இதையடுத்து, பராசக்தி அம்மன் திருத்தேர் புறப்பட்டது. அதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். அதன்பின்னர், குழந்தைகளும் வடம் பிடித்து இழுக் கும் சண்டிகேஸ்வரர் திருத்தேர் மாட வீதியில் வலம் வந்தது. ஒவ்வொரு திருத்தேரும் நிலைக்கு வந்ததும், அடுத்த திருத்தேர் புறப்பாடு நடைபெற்றது. காலை யில் தொடங்கிய பஞ்ச ரதங்களின் மாட வீதியுலா, நள்ளிரவு வரை நடைபெற்றது.

வரும் 10-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படு கிறது.

இந்த மகா தேரோட்டத்தில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய் தனர். தேரோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இன்றைய உற்சவம்

தீபத் திருவிழாவின் 8-ம் நாள் உற்சவம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி மூஷிக வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும் மாடவீதியில் வலம் வருகின்றனர். இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் பிச்சாண்டவர் உற்சவமும் அதைத் தொடர்ந்து இரவு 8 மணி அள வில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலாவும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT