பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

உச்சத்தில் வெங்காயம் விலை: ஒரு கிலோ ரூ.200-ஐ தாண்டி விற்பனை

செய்திப்பிரிவு

வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200-ஐத் தாண்டி விற்கப்படுகிறது.

தொடர் மழையால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ளது. தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பால் அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருப்பதால், சில்லறை விற்பனையில் அதன் விலை சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200 வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் தலா 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

அடுத்த 2 மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை உயர்வு நீடிக்கும் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை வரை வெங்காயம் விலை தொடர்ந்து உயரும் எனவும், தினமும் தலா ரூ.10 விலை கூடுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், வெங்காயம் விலை கிலோ 300 ரூபாயைத் தாண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT