தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்; இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்: ஒரேநாள் தேர்தல்?

செய்திப்பிரிவு

தேர்தல் ஆணையம் அறிவிப்பாணையை வாபஸ் பெற்றதை அடுத்து இன்று மாலை மீண்டும் அறிவிப்பாணை வெளியிடுகிறது. 2 நாள் தேர்தல் என்பது ஒருநாள் தேர்தலாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் நடத்தலாம், முதலில் வெளியிட்ட டிச.27 மற்றும் 30 அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் அதை ஏற்று தேர்தல் ஆணையம் அறிவிப்பாணையைத் திரும்பப் பெற்றது.

புதிய அறிவிப்பாணை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையர் ஆலோசனை முடிவடைந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பாணையை தேர்தல் ஆணையர் வெளியிட வாய்ப்புள்ளது. அதன்படி முன்னர் வெளியிட்ட அறிவிப்பாணையில் சிறிய மாற்றமாக ஒரே நாளில் டிச.30-ம் தேதி மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT