அரசு செவிலியராக பணி நியமனம் பெற்ற திருநங்கை அன்பு ரூபிக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்த அவரது தாய் தேன்மொழி. 
தமிழகம்

இலக்கை அடைய பாலினம் தடை இல்லை; அரசு செவிலியராக நியமனம் பெற்ற திருநங்கை அன்பு ரூபி நெகிழ்ச்சி

ரெ.ஜாய்சன்

``தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் இலக்கை அடைய பாலினம் தடை இல்லை” என அரசு செவிலியராக பணி நியமனம் பெற்றுள்ள தூத்துக்குடி திருநங்கை அன்பு ரூபி தெரி வித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர் புரம் அருகே உள்ள சேர்வைக்காரன் மடம் கிராமத்தைச் சேர்ந்த பார்வை யற்றவரான ரத்தினபாண்டி, இவ ரது மனைவி தேன்மொழி ஆகி யோரின் செல்லப்பிள்ளையாக பிறந்தவர் அன்புராஜ். கூலித் தொழி லாளர்களான இவர்கள் இருவரும், ஒரே மகன் என்பதால் அன்புராஜை பாசத்தோடு வளர்த்தனர். ஆனால், பள்ளிப் பருவத்தில் அன்புராஜின் உடலில் திடீர் மாற்றங்கள் ஏற் பட்டன. அன்புராஜ் படிப்படியாக திருநங்கையாக மாறினார். தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டார்.

உற்றார், உறவினர்கள், சுற்றியுள் ளோர் கேலியும் கிண்டலும் செய்த னர். ஆனால், அன்புராஜின் பெற் றோர் அவரை வெறுத்து ஒதுக்கா மல் அரவணைத்தனர். சமுதாயத் தின் கேலி, கிண்டல்களை புறந் தள்ளிவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினார் அன்பு ரூபி. சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி யில் பிளஸ் 2 முடித்ததும், செவி லியர் கல்வி படிக்க முடிவு செய்தார்.

அரசு கலந்தாய்வில் பங்கேற்று, திருநெல்வேலி மாவட்டம் காவல் கிணறு ராஜா செவிலியர் கல்லூரி யில் பிஎஸ்சி செவிலியர் படிப் பில் சேர்ந்தார். நான்காம் ஆண்டு படித்த போது அவரது தந்தை கால மானார். தாயார் தந்த ஊக்கத்தில் நம்பிக்கையை தளரவிடாமல் செவி லியர் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனையில் செவி லியராக மூன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். மருத்துவமனை மேலாண்மையில் எம்பிஏ படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் இந்த ஆண்டு நிறைவு செய்தார்.

தமிழ்நாடு மருத்துவப் பணியா ளர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற செவிலியர் பணிக்கான தேர்வில் அன்பு ரூபி தேர்ச்சி பெற்றார். கடந்த 2-ம் தேதி சென்னையில் நடை பெற்ற விழாவில் அன்பு ரூபிக்கு செவிலியர் பணிக்கான நியமன ஆணையை தமிழக முதல்வர் பழனிசாமி வழங்கினார். அவருக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

இதன் மூலம் தமிழகத்தில் அரசு செவிலியராக பணி நியமனம் பெற்றுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை அன்பு ரூபி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட் டத்திலேயே தனக்கு பணி வழங்க வேண்டும் என்ற அன்பு ரூபியின் வேண்டுகோளை ஏற்று, அவருக்கு தூத்துக்குடியிலேயே பணி நியமன ஆணை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கிராமத்தில் தாயோடு மகிழ்ச்சியாக இருந்த அன்பு ரூபியை சந்தித்தோம். தான் சந்தித்த சவால்களை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

‘‘எனது தந்தை சோடா கம் பெனியில் வேலை பார்த்தார். அங்கு தான் அவருக்கு கண்பார்வை பறிபோனது. எனது தாய் விவசாயக் கூலி வேலை செய்கிறார். உற வினர்களும், ஊராரும் என்னை வெறுத்து ஒதுக்கியபோதிலும் பெற்றோர் அரவணைத்தனர்.

பள்ளியில் படிக்கும்போதி ருந்தே பல சவால்களை சந்தித் தேன். அவற்றைத் தாண்டி இப் போது அரசு பணி நியமனம் பெற்றுள்ளேன். திருநங்கைகளை இந்த சமுதாயம் இன்னும் முழு மையாக ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றவர்களின் கேலி, கிண்டல், வெறுப்புகளை புறந்தள்ளிவிட்டு, தன்னம்பிக்கையும், விடா முயற்சி யும் இருந்தால், இலக்கை அடைய பாலினம் தடை இல்லை' என்றார் அன்பு ரூபி.

SCROLL FOR NEXT