பிரேமலதா: கோப்புப்படம் 
தமிழகம்

தெலங்கானா என்கவுன்ட்டர்: தவறு ஒன்றும் இல்லை; பிரேமலதா

செய்திப்பிரிவு

தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவம் தவறு இல்லை என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

கடந்த 27-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைதான 4 பேரும் இன்று (டிச.6) அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுன்ட்டருக்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இந்த என்கவுன்ட்டரில் தவறு ஒன்றும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. அந்த பெண் என்ன தவறு செய்தார்? அந்த பெண்ணை ஏன் பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்தனர்? இம்மாதிரியான கடுமையான தண்டனை கொடுத்தால் தான், பெண்கள் எங்கும் பாதுகாப்பாக செல்ல முடியும் என்ற நிலை வருங்காலத்தில் ஏற்படும்" என தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "யார் தவறு செய்தாலும் தண்டனைக்கு உரியவர்கள் தான். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஒரே நீதியுடன் தண்டனை வழங்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை" என பிரேமலதா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT