மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெய ரில் புதிய இயக்கம் தொடங்க திட்ட மிட்டுள்ளதாக கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் மற்றும் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த வி.பொன்ராஜ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பொன்ராஜ் நேற்று கூறியதாவது:
உலகில் 2.5 கோடி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நேரில் சந் தித்து லட்சியத்தை விதைத்த ஒரே ஆசிரியர் அப்துல் கலாம்தான். அவர் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட 41-வது நாள் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தன்று வருகிறது. அன்றைய தினத்தில், ‘அப்துல் கலாம் தனது வாழ்நாளில் கொடுத்த உறுதிமொழிகளை வாழ்நாள் முழுக்க கடைபிடிப்பேன்’ என்று மாணவர்களும் இளைஞர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.
உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச் சியை தங்கள் பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம், வாழுமிடம் என எல்லோரும் ஒன்று கூடி நடத்த லாம். நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்பது எங்கள் எண்ணம். ‘வாழ்க்கையில் லட்சிய விதையை விதைப்பேன், நேர்மையாக உழைப்பேன், வேறு பாடுகளின்றி வாழ்வேன்’ என்பது உள்ளிட்ட கலாமின் 10 உறுதிமொழி களை பின்பற்ற வேண்டும்.
இது தொடர்பான விவரம் www.abdulkalam.com என்ற இணைய தளத்தில் உள்ளது. அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உறுதிமொழி எடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் கூறும்போது, “தனது வாழ்நாள் முழுவதும் மாண வர்களை சந்தித்து ஒரு ஆசிரியராக திகழ்ந்தவர் கலாம். எனவே, ஆசிரியர் தினத்தன்று அவரை பின்பற்றும் வழியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என கலாமின் குடும்பத்தார் சார்பில் வேண்டுகிறோம்” என்றார்.
‘அப்துல் கலாம் பெயரில் ஏராள மான இயக்கங்கள் உள்ளன. நீங்கள் ஏதாவது இயக்கம் தொடங்குவீர் களா’ என்று நிருபர்கள் கேட்ட தற்கு, “செப்டம்பர் 4-ம் தேதி ராமேசுவரத் தில் ஒரு பிரார்த்தனை நிகழ்ச்சியை நடத்துகிறோம். அப்போது இயக்கம் ஆரம் பிப்பது பற்றி ஆலோசிப்போம். அதற்காச்ன திட்டம் உள்ளது’’ என்று ஷேக் சலீமும், பொன்ராஜும் கூட்டாக அறிவித்தனர்.